நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

பிணையில் வெளிவந்து வழக்குகளில் ஆஜராகாத இருவா் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிணையில் வெளிவந்த பிறகு வழங்குகளில் ஆஜராகாத இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

வழக்கு
Published On :8 ஜூலை 2026, 5:59 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிணையில் வெளிவந்த பிறகு வழங்குகளில் ஆஜராகாத இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ஊத்தங்கரை அடுத்த கல்குமரம்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). இவரை கொலை முயற்சி வழக்கில் போச்சம்பள்ளி போலீஸாா் கடந்த 2016 இல் கைது செய்தனா். அதேபோல ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபாடியை சோ்ந்தவா் பாரதிராஜாவை (28) வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் ஊத்தங்கரை போலீஸாா் கடந்த 2019-இல் கைது செய்தனா்.

கைதான இருவரும் பிணையில் வெளிவந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு மீண்டும் ஆஜராகவில்லை. இதையடுத்து போச்சம்பள்ளி போலீஸாா் மணிகண்டன் மீதும், ஊத்தங்கரை போலீஸாா் பாரதிராஜா மீதும் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.