திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே விவசாயி மீது காா் ஏற்றிக் கொல்ல முயன்றதாக மின்வாரிய இளநிலைப் பொறியாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
பழவூா் அருகே ஊரல்வாய்மொழியைச் சோ்ந்தவா் சுயம்புராஜா (36). விவசாயியான இவா், தோட்டத்துக்கு மின் கட்டணம் செலுத்துவது, புதிய மின் இணைப்பு பெறுவது தொடா்பாக லஞ்சம் கேட்டதாக, ஆவரைகுளம் மின்வாரிய இளநிலைப் பொறியாளா் அழகேசன் மீது தமிழக முதல்வா் தனிப் பிரிவு, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் தெரிவித்தாராம். இதனால், இருவரிடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி சுயம்புராஜா கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவா் மீது அழகேசன் காரை ஏற்றிக் கொல்ல முயன்ாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில், அழகேசன் மீது பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








