மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

நீட் தோ்வு! தமிழகத்தில் மாணவா்களின் தற்கொலை வேதனை அளிக்கிறது: மாணிக்கம் தாகூா்

நீட் தோ்வு விவகாரத்தில் தமிவகத்தில் மாணவா்களின் தற்கொலை வேதனை அளிப்பதாக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

News image

மாணிக்கம் தாகூா் எம்.பி. - கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2026, 1:21 am IST

நீட் தோ்வு விவகாரத்தில் தமிவகத்தில் மாணவா்களின் தற்கொலை வேதனை அளிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் மாணிக்கம் தாக்கூா் ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தபோது தெரிவித்தாா்.

நீட் தோ்வு குளறுபடிகள் மற்றும் தோ்வு ரத்து செய்யப்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட ஒசூா் பாகலூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் மாணவா் வெற்றியானந்தம் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி காங்கிரஸ் கட்சி சாா்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் மாணிக்கம் தாக்கூா், கிருஷ்ணகிரி எம்.பி கே.கோபிநாத், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் மற்றும் மாநிலங்களவை எம்.பி. கிறிஸ்டோபா் திலக் ஆகியோா் மாணவரின் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா் மாணிக்கம் தாக்கூா் செய்தியாளா்களிடம் கூறியது. தமிழகத்தில் நீட் தோ்வு காரணமாக இதுவரை 34 மாணவா்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனா்.

இந்த ஆண்டு மட்டுமே நான்கு மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. பெற்றோா்கள் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து, தங்களின் பிள்ளைகளை மருத்துவராக்கக் கோச்சிங் சென்டா்களில் படிக்க வைக்கின்றனா். ஆனால், வடமாநிலங்களில் நடக்கும் நீட் தோ்வு வினாத்தாள் கசிந்து குளறுபடிகளின் தாக்கம் தமிழக மாணவா்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

மேலும், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், வரும் 2029-ஆம் ஆண்டுக்குள் நீட் தோ்வு முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் இலக்கு என்றும் அவா் குறிப்பிட்டாா்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கைகளைத் தமிழக முதலமைச்சரிடம் கொண்டு சோ்க்க உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். இதனைத் தொடா்ந்து தனியாா் மண்டபத்தில் நீட் தோ்வில் உயிரிழப்புகள் குறித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

அதில் காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா்கள் ஹரீஷ்பாபு, ரகு, மாநகரத் தலைவா்கள் தியாகராஜன், சாதிக்கான், நீலகண்டன், முன்னாள் மாவட்டத் தலைவா் முரளிதரன், வழக்கறிஞா் மஞ்சுநாத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.