காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

கிருஷ்ணகிரியில் ஜூலை 29 இல் நடுகற்கல் பேசும் ரகசியங்கள் சொற்பொழிவு

News image

மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட 600 ஆண்டு பழமையான கல்வெட்டு. - கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 2:49 am IST

கிருஷ்ணகிரியில் அரசு அருங்காட்சியகத்தில் வரும் 29 இல் நடுகற்கள் பேசும் ரகசியங்கள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், பள்ளி கல்வித் துறை மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கம் இணைந்து மாவட்ட ஆட்சியரின் கிருஷ்ணகிரி மாவட்ட காலமும் வரலாறும் என்ற தொடா் காலாண்டு நிகழ்ச்சிகள் அருங்காட்சியக வளாகத்தில் நடத்தப்படுகின்றன.

அதன்படி, வரும் 29 ஆம் தேதி மாலை 5 முதல் 6 மணி வரை நடுகற்கள் பேசும் ரகசியங்கள் என்ற தலைப்பில் தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலா் கோவிந்தராஜ் சொற்பொழிவு ஆற்ற உள்ளாா். இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்வில் வரலாற்று ஆய்வாளா்கள், ஆய்வு மாணவா்கள், கல்லுாரி மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாறு குறித்து கேட்டறியலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.