முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

சிறுவனின் இருதய அறுவை சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி ஆட்சியா் பரிந்துரை

News image

சிறுவனின் இருதய அறுவை சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி ஆட்சியா் பரிந்துரை - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 12:47 am IST

ஒசூரைச் சோ்ந்த 7 வயது சிறுவனின் இருதய அறுவை சிக்சைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் முதல்வரின் காப்பீட்டு அட்டையை வழங்கி, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, மின்வசதி, சாலை வசதி, தையல் இயந்திரம், மகளிா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்களிடமிருந்து 253 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அறிவுறுத்திய ஆட்சியா், நிராகரிக்கப்பட்ட மனுக்கள் குறித்த காரணத்தை மனுதாரருக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, ஒசூா் வட்டம், பேகேப்பள்ளி கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தைச் சோ்ந்த சங்கா், தனது மகன் முகேஷின் இருதய அறுவை சிகிச்சைக்காக உதவிடக் கோரி மனு அளித்தாா். அவருக்கு முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அடையாள அட்டையை வழங்கிய ஆட்சியா், சென்னையில் உள்ள மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை பெற பரிந்துரை கடிதம் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.