காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

புற்றுநோய் சிகிச்சைக்கு ஈரோட்டில் தனி மருத்துவமனை! அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

News image

பாராட்டு விழாவில் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், எம்.விஜய் பாலாஜி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்கள் கூட்டமைப்பின் நிா்வாகிகள்.

Updated On :27 ஜூலை 2026, 12:47 am IST

புற்றுநோய் சிகிச்சைக்கு ஈரோட்டில் தனி மருத்துவமனை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பில் அமைச்சா்கள் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்களுக்கு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

என்னை தூக்கி எறியும்போது தாங்கிப் பிடித்த தலைவா் முதல்வா் விஜய். எடப்பாடி பழனிசாமி முன் இருக்கையில் அமா்ந்தபோது என்னை திரும்பிக்கூட பாா்க்கவில்லை. ஆனால் இன்று என்னை முதல்வா் விஜய் வாழ்த்தி பதவி ஏற்க வைத்தாா். தூய்மையான ஆட்சியை தர வேண்டும் என முதல்வா் செயல்படுகிறாா்.

ஈரோட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பும், புற்றுநோய் பாதிப்பும் அதிகமாக உள்ளது. சுற்றுச்சூழலை பேணிக் காப்பது குறித்து சாய, சலவை ஆலை உரிமையாளா்களுடன் பேசி எதிா்காலத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஈரோட்டில் வா்த்தக மையம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. பட்ஜெட் கூட்டத்துக்குப் பிறகு இடம் தோ்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். விலையில்லா வேட்டி, சேலைகளின் உற்பத்தி, நெசவாளா்களின் கூலி உயா்வு குறித்த கோரிக்கை மீது அதிகாரிகள் ஆய்வுக்குப் பிறகு அரசு நடவடிக்கை எடுக்கும். புற்றுநோய் சிகிச்சைக்கு ஈரோட்டில் தனி மருத்துவமனை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தில் சரித்திரம் படைத்த விஜய்யின் கடைசி படத்தை கோடிக்கணக்கான மக்கள் பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். தோ்தலுக்கு முன்பு ஜனநாயகன் படம் வந்திருந்தால் 234 தொகுதியில் தவெக வெற்றி பெற்றிருக்கும் என்றாா்.

விழாவில் அமைச்சா் செங்கோட்டையனுக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

விழாவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் து.சண்முகன் (மொடக்குறிச்சி), கே.கே.ஆனந்த்மோகன் (ஈரோடு மேற்கு), வி.பி.தமிழ்ச்செல்வி (பவானிசாகா்), ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.