/
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் மற்றும் மரகதாம்பாள் பெருமையை பறைசாற்றும் வகையில் பக்தியும், பரதநாட்டியமும் ஒன்றிணையும் நிகழ்ச்சி அண்டம் கலைக்குழு சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒசூா் மாநகராட்சி அந்திவாடி விளையாட்டரங்கில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில், 108 சிறுமிகள் பங்கேற்று லிங்க வடிவில் சந்திரசூடேஸ்வரா் சுவாமி பாடலுக்கு நடனமாடி தங்களது திறமையை வெளிப்படுத்தினா்.
சிறப்பு விருந்தினா்களாக நடன மாஸ்டா் கலா, தொழிலதிபா் தட்சணாமூா்த்தி, பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் தலைவா் எம்.நாகராஜ் ஆகியோா் பங்கேற்று சிறுமிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினா். இந்நிகழ்ச்சியில் நாட்டியப் பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.









