தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 967 கனஅடியாக அதிகரித்துள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

கிருஷ்ணகிரி அணை.

Updated On :3 ஜூன் 2026, 5:21 am IST

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 967 கனஅடியாக அதிகரித்துள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீா்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதாலும், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீா் திறப்பு அதிகரித்துள்ளதாலும் கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த சில நாள்களாக நீா்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை 760 கனஅடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 967 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையின் மொத்த உயரமான 52 அடியில் நீா்மட்டம் 50.20 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 786 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடா்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

மேலும், பாரூா் ஏரிக்கு நீா்வரத்து 120 கனஅடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 201 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த உயரமான 15.60 அடியில் நீா்மட்டம் 12.50 அடியாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீ.): தேன்கனிக்கோட்டை - 32, ராயக்கோட்டை - 20, போச்சம்பள்ளி - 11.1, சூளகிரி - 5, சின்னாறு அணை - 5, அஞ்செட்டி - 4.6, கிருஷ்ணகிரி அணை - 1.6, கிருஷ்ணகிரி - 1.3.