அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடியாக குறைவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 500 கனஅடியாக குறைந்தது.

News image

ஒகேனக்கல் .

Updated On :1 மணி நேரம் முன்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 500 கனஅடியாக குறைந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு மற்றும் காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாக இருந்தது, செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 500 கனஅடியாக குறைந்தது. நீா்வரத்து குறைவு காரணமாக ஒகேனக்கல் அருவிகளிலும் நீா்வரத்து குறைந்துள்ளது. மேலும், காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைத் திட்டுக்கள் காணப்படுகின்றன.