/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3,000 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 3,000 கனஅடியாக குறைந்துள்ளது.

News image

ஒகேனக்கல்

Updated On :4 ஜூன் 2026, 1:58 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 3,000 கனஅடியாக குறைந்துள்ளது.

தமிழக காவிரி கரையோர நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்துவந்து கனமழை குறைந்துள்ளதால், காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டல்லாவில் நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை 3,000 கனஅடியாக குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.