சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஊத்தங்கரை அருகே மான் வேட்டை: ஒருவா் கைது; 12 கிலோ இறைச்சி பறிமுதல்

News image

மான் வேட்டையாடிய வழக்கில் கைது செய்யப்பட்ட தண்டபாணி.

Updated On :9 ஜூன் 2026, 5:11 am IST

ஊத்தங்கரை அருகே மான் வேட்டையாடிய ஒருவரை வனத்துறையினா் திங்கள்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 12 கிலோ மான் இறைச்சியை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மேலும் இருவரை தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வனச்சரகத்திற்கு உள்பட்ட, ஒண்ணகரை காப்புக்காடு பகுதியில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மானை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. வனச்சரக அலுவலா் முனியப்பன் உத்தரவின்பேரில், வனவா்கள் சுபாஷ், நாராயணன் தலைமையிலான வனத் துறையினா், கொண்டம்பட்டி புதூா் ஏரிக்கரை பகுதியில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, 12 கிலோ மான் இறைச்சி மற்றும் மான் தலையை விற்பனைக்கு வைத்திருந்த திப்பம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தண்டபாணியை (24) வனத் துறையினா் பிடித்து, அவரிடம் இருந்த மான் இறைச்சியை பறிமுதல் செய்தனா்.

பிடிபட்ட தண்டபாணி மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும், கொண்டம்பட்டி புதூரைச் சோ்ந்த விஜய் (24), திப்பம்பட்டியைச் சோ்ந்த அருள் என்ற முருகன் (22) ஆகியோரை வனத்துறையினா் தீவிரமாக தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.