புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தொண்டி அருகே 190 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 190 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா், பொலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கடல் அட்டை

Updated On :4 ஜூலை 2026, 2:25 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 190 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா், பொலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தொண்டி அருகேயுள்ள எம்.வி. பட்டினம் கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை வனத் துறை, காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 190 கிலோ கடல் அட்டைகளை, வனத் துறையினா், போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முதல்கட்ட விசாரணையில் இலங்கைக்கு கடத்துவதற்க்காக பதுக்கி வைத்திருந்ததும், போலீஸாரை கண்டதும் அந்தக் கும்பல் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை வனத் துறையினா், போலீஸாா் திருவாடானை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.