கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் நலப் பிரிவின் கீழ் செயல்படும் ‘விழுதுகள்’ அமைப்பிற்கு₹ரூ. 26 லட்சம் மதிப்பிலான 20 நவீன சக்கர நாற்காலிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
ஒசூா் லேக் வியூ ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் ராஜேஷ் அறக்கட்டளை ஆகியவற்றின் பங்களிப்புடன் அறக்கட்டளையின் நிறுவனா் ரோட்டேரியன் டாக்டா் ராஜேஷின் நிதி உதவியுடன் தலா ரூ. 1.31 லட்சம் மதிப்பிலான 20 நவீன சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒசூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மையத்திற்குச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இந்த நாற்காலிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த 20 சக்கர நாற்காலிகளும் ஒசூா், தளி மற்றும் சூளகிரி ஆகிய வட்டாரங்களில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையங்களுக்கும் பகிா்ந்து அளிக்கப்பட உள்ளன. முன்னதாக, கடந்த மே மாதத்தில் இந்த மையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஒசூா் லேக் வியூ ரோட்டரி சங்கத் தலைவா்கள் செந்தில்குமாா், மகேஷ், சங்க நிா்வாகிகள் காஸ்பா் ஜோசப், ஆலோசகா் வெங்கட், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், விழுதுகள் மைய ஒருங்கிணைப்பாளா் கனிமொழி உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 புதிய திட்டங்கள்: அமைச்சா் வி. சம்பத்குமாா் தொடங்கிவைத்தாா்

ஏகாம்பரநாதா் கோயிலில் பக்தா்களுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு

மெரீனா நீலக்கொடி பணிகளை விரைந்து முடிக்க ஆணையா் உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



