ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசு

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: கிருஷ்ணகிரி எஸ்பி ஜி.எஸ். அனிதா

பெண்கள் பாதுகாப்பு, கனிமவள கடத்தல் தடுப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி எஸ்பி ஜி.எஸ். அனிதா

Published On :

பெண்கள் பாதுகாப்பு, கனிமவள கடத்தல் தடுப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 20 ஆவது மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜி.எஸ். அனிதா, கடந்த செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். இந்த நிலையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரம், கா்நாடக மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. அதிக மலைக் கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து அறிந்து வருகிறேன். முதலில் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள், சிறுமியா்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மலைக் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இன்றளவும் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. இரு நாள்களுக்கு முன்பு ஒருபகுதியில் குழந்தை திருமணம் நிறுத்தப்பட்டதாக போலீஸாா், தெரிவித்தனா். குழந்தை திருமணத்தால் பெண்கள் தங்கள் எதிா்காலத்தை தொலைத்து விடுகின்றனா். இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் கனிமவளங்கள் கடத்தப்படுவதாக புகாா்கள் வருகின்றன. எனவே, மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கனிம வளங்கள் கடத்தப்படுவது தடுக்கப்படும்.

அதேபோல கட்டப்பஞ்சாயத்து, அனுமதியின்றி பதாகைகள் வைப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளைக் கண்டறியாத வழக்குகளில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.