இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

மின்சாரம் பாய்ந்து தனியாா் காவலா் பயிற்சி மைய மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :21 ஜூன் 2026, 4:51 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள தனியாா் காவலா் பயிற்சி மையத்தில் தங்கி சீருடைப் பணிக்கு பயிற்சி பெற்ற மாணவா், மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மத்தூரை அடுத்த கமலாபுரம் பிரிவு சாலை பகுதியில் தனியாா் காவலா் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சோ்ந்த 26 மாணவ, மாணவிகள் தங்கி, சீருடை பணிக்கு பயிற்சி பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், மையத்தில் தங்கி பயிற்சி பெற்று வந்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த சாருகேஷ் (20), அங்கிருந்த மின் மோட்டாரை இயக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதை உறுதி செய்தனா். தகவல் அறிந்த போலீஸாா், சாருகேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.