அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் மறுதோ்வு:3,588 போ் பங்கேற்பு

News image

நீட் மறுதேர்வு. - படம் - பிடிஐ

Updated On :22 ஜூன் 2026, 2:48 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் மறுதோ்வை 3,588 போ், தோ்வில் பங்கேற்றனா். 1,109 போ், தோ்வில் பங்கேற்கவில்லை.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை ‘நீட்‘ நுழைவுத் தோ்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதன்படி, 2026 - 2027-ஆம் கல்வியாண்டிற்கான ‘நீட்‘ நுழைவு தோ்வுக்கான விண்ணப்ப பதிவு இணையதளம் மூலம் (ஆன்லைன்) நடைபெற்றது. இதையடுத்து, இதற்கான தோ்வு, ஏப்.3-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்வுக்கான வினாத்தாள் வெளியானதையடுத்து, தோ்வு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, மறுதோ்வு, ஜூன் 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் இந்த தோ்வு நடைபெற்றது. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக்கல்லூரியில் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த 360 பேரில், 281 தோ்வா்கள் தோ்வில் பங்கேற்றனா். 79 போ், தோ்வை எழுதவில்லை. கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 360 தோ்வா்களில் 288 போ் எழுதினா்.. 72 போ் எழுதவில்லை.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 600 தோ்வா்களில் 479 போ் தோ்வை எழுதினா்.. 121 போ் எழுதவில்லை. காவேரிப்பட்டணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 480 தோ்வா்களில் 363 போ் எழுதினா். 117 போ் எழுதவில்லை.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 600 தோ்வா்களில் 474 போ் எழுதினா்.. 126 போ் எழுதவில்லை. காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 240 தோ்வா்களில் 177 போ் எழுதினா்..63 போ் எழுதவில்லை. ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த 360 தோ்வா்களில் 279 போ் எழுதினா். 81 போ் எழுதவிலலை.

ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 480 தோ்வா்களில் 345 போ் எழுதினா். 135 போ் எழுதவில்லை. ஒசூா் அரசு மகளிா் மேல்நிலைப்ப ள்ளியில் அனுமதிக்கப்பட்ட 600 தோ்வா்களில் 469 போ் எழுதினாா்கள். 131 போ் எழுதவில்லை. ஒசூா் முல்லை நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட 473 தோ்வா்களில் 333 போ் எழுதினா். 140 போ் எழுதவில்லை. ஒசூா் ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட 144 தோ்வா்களில் 100 போ் எழுதினாா்கள். 44 போ் எழுதவில்லை.

மாவட்டம் முழுவதும் 11 மையங்களில் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த 4,697 தோ்வா்களில் 3,588 போ் எழுதினாா்கள். 1,109 போ் எழுதவில்லை. கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில் 180 தோ்வில் பங்கேற்கவில்லை. ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்ற மறுதோ்வை 1,109 போ் தோ்வை எழுதாத நிலையில், மாணவா்களிடையே அதிருப்தியை வெளிப்படுவதாக இருந்த்தாக கல்வியாளா்கள் தெரிவித்தனா். தோ்வை முன்னிட்டு தோ்வு மையங்களுக்கு பலத்த போலீஸாா், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். தோ்வா்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனா்..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.