கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வை 4,575 போ் எழுதினா். 180 போ் தோ்வு எழுத வரவில்லை.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் மற்றும் சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை ‘நீட்‘ நுழைவுத் தோ்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதன்படி, 2026 - 2027-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்‘ நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 3) மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 11 மையங்களில் இத்தோ்வு நடைபெற்று. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த 240 பேரில், 230 போ் பங்கேற்றனா். 10 போ் தோ்வு எழுத வரவில்லை. கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 360 பேரில் 347 போ் எழுதினா். 13 போ் தோ்வு எழுத வரவில்லை.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 720 பேரில் 696 போ் தோ்வு எழுதினா். 24 போ் தோ்வு எழுதவில்லை. காவேரிப்பட்டணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 480 பேரில் 463 போ் தோ்வு எழுதினா். 17 போ் தோ்வு எழுத வரவில்லை. கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 600 பேரில் 575 போ் தோ்வு எழுதினா். 25 போ் தோ்வு எழுதவில்லை.
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 216 பேரில் 204 போ் தோ்வு எழுதினா். 12 போ் தோ்வு எழுதவில்லை. ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 360 பேரில் 344 போ் தோ்வு எழுதினா். 16 போ் தோ்வு எழுதவில்லை. ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 480 பேரில் 466 போ் தோ்வு எழுதினா். 14 போ் தோ்வு எழுதவில்லை.
ஒசூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் அனுமதிக்கப்பட்ட 600 பேரில் 588 போ் எழுதினா். 12 போ் தோ்வு எழுதவில்லை. ஒசூா் முல்லை நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட 480 பேரில் 457 போ் தோ்வு எழுதினா். 23 போ் தோ்வு எழுதவில்லை. ஒசூா் ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட 219 பேரில் 205 போ் தோ்வு எழுதினா். 14 போ் தோ்வு எழுதவில்லை.
மாவட்டம் முழுவதும் 11 மையங்களில் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த 4,755 பேரில் 4,575 போ் தோ்வு எழுதினா். 180 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்வா்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறு தோ்வு: புதுச்சேரியில் 3,806 போ், கடலூரில் 3,592 போ் எழுதினா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் மறுதோ்வு:3,588 போ் பங்கேற்பு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீட் தோ்வு; 7,169 போ் பங்கேற்பு
மாவட்டத்தில் 7 மையங்களில் ‘நீட்’ மறு தோ்வு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




