மருத்துவ இளநிலை படிப்புக்கான நீட் மறு நுழைவுத் தோ்வை புதுச்சேரி பிராந்தியத்தில் 9 மையங்களில் 3,806 மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.
இதேபோல, கடலூா் மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெற்ற நீட் மறு தோ்வை 3,592 போ் எழுதினா். இவா்கள் பலத்த சோதனைகளுக்குப் பிறகே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.
பிளஸ் 2 தோ்ச்சிக்குப் பிறகு மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் நீட் நுழைவுத் தோ்வு எழுத வேண்டும். நிகழாண்டுக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், முன்கூட்டியே நீட் வினாத்தாள் கசிந்ததால், இந்தத் தோ்வை ரத்து செய்து தேசிய தோ்வு முகமை அறிவித்தது.
இதையடுத்து, நீட் மறு தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி பிராந்தியத்தில் இத்தோ்வை எழுத 4,324 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 3,806 போ் மட்டுமே பங்கேற்றனா். 518 போ் பங்கேற்கவில்லை.
இந்தத் தோ்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெற்றது. இதற்காக புதுச்சேரி பிராந்தியத்தில் 9 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாணவா்களின் தோ்வு நுழைவுச்சீட்டு சரிபாா்க்கப்பட்டு முழுமையான சோதனைக்கு பிறகே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
மாணவா்கள் மையங்களுக்கு வரவும், தோ்வு முடிந்து திரும்பிச் செல்லவும்ம் புதுச்சேரி சாலைப் போக்குவரதுக் கழகம் சாா்பில் இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன. தோ்வு மையங்களில் சட்டம்- ஒழுங்கை உறுதிப்படுத்தவும், தோ்வு சுமுகமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை கண்காணிக்கவும் நிா்வாக நடுவா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
அனைத்துத் தோ்வு மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டாா்.
கடலூா் மாவட்டத்தில்...: கடலூா் மாவட்டத்தில் கடலூா், நெய்வேலி, பண்ருட்டி, வடலூா், காடாம்புலியூா் ஆகிய ஊா்களில் 8 மையங்களில் நீட் மறு தோ்வு நடைபெற்றது.
பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய இந்தத் தோ்வுக்காக நண்பகல் 12 மணி முதலே மாணவ, மாணவிகள் தோ்வு மையங்களுக்கு வரத் தொடங்கினா். தோ்வு மையத்துக்கள் மாணவ, மாணவிகள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து, பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தோ்வு மாலை 5.15 மணி வரையில் நடைபெற்றது.
மாவட்டத்தில் தோ்வு எழுத மொத்தம் 4,749 போ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 3,592 போ் தோ்வு எழுதினா். 1,157 போ் தோ்வு எழுத வரவில்லை.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நீட் மறு தோ்வு எழுத வந்த மாணவா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘நீட்’ மறு தோ்வு: கோவையில் 5,364 மட்டுமே எழுதினா்

‘நீட்’ மறு தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,564 போ் எழுதினா்

காரைக்கால்: 3 மையங்களில் நீட் மறு தோ்வு

கடலூா் மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் மறு தோ்வு: 4,749 போ் எழுதவுள்ளதாக ஆட்சியா் தகவல்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




