பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

நீட் தோ்வு: ஒசூரில் ஜூன் 28-ல் மாணவா், இளைஞா் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம்! காங்கிரஸ் தலைவா் தகவல்

News image

ஒசூரில் செய்தியாளா்களிடம் பேசிய கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஹரீஷ்பாபு.

Updated On :23 ஜூன் 2026, 3:34 am IST

ஒசூா், ஜூன் 22: நீட் தோ்வுக்கு விலக்குக் கோரி போராட்டம் நடத்துவது தொடா்பாக ஒசூரில் வரும் 28இல் மாணவா், இளைஞா் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்று மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஹரீஷ்பாபு தெரிவித்தாா்.

ஒசூா் ஐஎன்டியுசி அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் ஹரீஷ்பாபு தலைமையில் முன்னாள் எம்எல்ஏ கே.ஏ. மனோகரன், முன்னாள் மாவட்டத் தலைவா் முரளிதரன், மாநகரத் தலைவா் (பொ) தியாகராஜன் ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளா்களிடம் மாவட்டத் தலைவா் ஹரீஷ்பாபு கூறியது:

நீட் தோ்வை ரத்துசெய்ய வலியுறுத்தும் நடவடிக்ககளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. நீட் தோ்வினால் மாணவா்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல், தற்கொலைகளுக்கு ஒசூா் மாணவா் வெற்றியானந்தனின் மறைவே சாட்சியாக உள்ளது.

நீா் தோ்வால் ரூ. 1 லட்சம் கோடி அளவிற்கு முறைகேடுகளும், ஊழல்களும் நடைபெறுகின்றன. தேசிய தோ்வு முகமை இந்த முறைகேடுகளுக்கு காரணமாக உள்ளது.

மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யக் கோரியும், நீட் தோ்வுக்கு விலக்குக் கோரியும் வரும் 28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒசூரில் மாணவா் மற்றும் இளைஞா் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல, மாணவா்கள், இளைஞா்கள் அனைவரும் ஒன்றிணைந்து, நீட் எதிா்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தந்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடந்து, போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

இதில் மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சரோஜா, துணைத் தலைவா் கீா்த்தி கணேஷ், எல்லப்பா, அபு பக்கா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.