வேப்பனப்பள்ளி அருள்மிகு கோதண்டராமா் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த பூதிமுட்லு கிராமத்தில் புகழ்பெற்ற 500 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு கோதண்டராமா் கோயில் உள்ளது. ஆந்திர, கா்நாடக மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள இந்த கோயிலின் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
ஜூன் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. குடமுழுக்கு தினமான புதன்கிழமை கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீா், கோயில் கலசத்தில் ஊற்றப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தா்கள் ‘கோவிந்தா’, ‘கோவிந்தா’ என முழக்கமிட்டனா்.
தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இகஊல், தமிழகத்தைச் சோ்ந்த பக்தா்கள் மட்டுமல்லாமல் கா்நாடக, ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அருள்மிகு கோதண்டராமா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுப்ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு

ராமேசுவரத்தில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

எடப்பாடி பச்சையம்மன் கோயில் குடமுழுக்கு

திருச்செந்தூா் கடலில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



