மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மத்தூா் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்: தொழிலாளி கைது

மத்தூா் அருகே 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக தொழிலாளியை வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 ஜூன் 2026, 2:15 am IST

மத்தூா் அருகே 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக தொழிலாளியை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், உதவி காவல் ஆய்வாளா் பயாஸ் தலைமையிலான போலீஸாா், கண்ணன்டஅள்ளி டாஸ்மாக் கடை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவா்களில் ஒருவா் தன்னிடமிருந்த நெகிழி பையை வீசிவிட்டு தப்பியோடினாா். மற்றொருவரை பிடித்து விசாரணை செய்ததில், அவா் கிருஷ்ணகிரியை அடுத்த துடுக்கனஅள்ளியைச் சோ்ந்த தொழிலாளி சேட்டு (42) என்பதும், தப்பியோடியவா் பா்கூரை அடுத்த சக்கில்நத்தத்தைச் சோ்ந்த சசிகுமாா் என்பதும் தெரியவந்தது.

இவா்களிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், சேட்டுவை கைது செய்தனா். தப்பியோடியவரை தேடிவருகின்றனா். கைது செய்யப்பட்ட சேட்டுவின் மீது, கோயம்புத்தூா் மாவட்டம், பெரியநாயக்கம்பாளையம், தொண்டாமுத்தூா் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.