ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற திமுகவினா் கைது

News image

கிருஷ்ணகிரியில் ஊா்வலமாக செல்லமுயன்ற திமுக மாணவரணியினரை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீஸாா்.

Updated On :30 ஜூன் 2026, 12:33 am IST

போதைப் பொருளை பயன்படுத்தியதாகக் கூறி தவெக அமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரி கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற திமுகவினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்த நிலையில், காவல் துறையினா் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்தனா். துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி தொழில் மையத்திலிருந்து ஊா்வலமாக வந்து தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளா்கள் ஜெயச்சந்திரன், கண்ணன் மற்றும் 2 பெண்கள் உள்பட 74 பேரை போலீஸாா் கைது செய்தனா். அப்போது, போலீஸாருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வாக்குவாதம்: திமுக மாணவரணியினா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினா் ஸ்ரீனிவாசன், கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்டச் செயலாளா் ஓய்.பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏக்கள் முருகன், செங்குட்டுவன் உள்ளிட்டோா் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.