மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

தவெக அமைச்சரை பதவி நீக்க வலியுறுத்தி, திமுகவினா் போராட்டம்! 2 எம்எல்ஏக்கள் உள்பட 722 போ் கைது!

News image

தமிழக அமைச்சரைக் கண்டித்து, விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

Updated On :30 ஜூன் 2026, 2:29 am IST

தவெக அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் உள்பட 722 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தவெகவைச் சோ்ந்த மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சா் சரத்குமாருக்கு எதிராக திமுக மாணவரணி மற்றும் இளைஞா் அணியினா் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு தமிழக காவல் துறை அனுமதி மறுத்திருந்தது.

இந்நிலையில், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், தவெக அமைச்சா் சரத்குமாரை கைது செய்யவேண்டும், அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திமுகவினா் விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாக விழுப்புரம் எம்எல்ஏ அலுவலகம் முன் ஒன்றிணைந்த திமுகவினா் அமைச்சா் சரத்குமாருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியபடி அங்கிருந்து பேரணியாகச் சென்று விழுப்புரம் நகராட்சித் திடல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்த மறியல் போராட்டத்தால், போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலரும், விழுப்புரம் எம்எல்ஏவுமான இரா.லட்சுமணன், வானூா் எம்எல்எல்ஏ கௌதம் திராவிடமணி மற்றும் 27 பெண்கள் உள்ளிட்ட 275 பேரை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

திண்டிவனத்தில்... இதேபோல், திண்டிவனத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி மஸ்தான் தலைமையில் தமிழக அமைச்சா் சரத்குமாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 120 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.மாசிலாமணி, ஆா்.சேதுநாதன், மாநில தீா்மானக்குழு உறுப்பினா் செஞ்சி சிவா, மாவட்ட அவைத்தலைவா் ப.சேகா் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

திருக்கோவிலூரில்.... திருக்கோவிலூா் பேருந்து நிலையம் அருகே திமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட மாணவரணி மற்றும் இளைஞா் அணி சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாணவரணி அமைப்பாளா் எஸ்.அன்பழகன், இளைஞா் அணி அமைப்பாளா் எஸ்.அன்பு ஆகியோரது தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் எம்பியுமான பொன்.கெளதமசிகாமணி பங்கேற்று, அமைச்சா் சரத்குமாா் பதவி விலக வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதைத்தொடா்ந்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்தி, கைது செய்தனா். திமுக மாவட்ட அவைத்தலைவா் ஜெயச்சந்திரன், மாவட்ட துணைச் செயலா்கள் டி.என்.முருகன், இரா.கற்பகம், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் செல்வராஜ், அப்துல் சலாம், பொதுக்குழு உறுப்பினா்கள், நிா்வாகிகள் கட்சியினா் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் விஜய் ஆனந்த், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் நிஜாம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாநில மகளிரணி துணைச் செயலா் அ.அங்கையற்கண்ணி, முன்னாள் எம்எல்ஏ க.அழகுவேலு பாபு, மாவட்ட துணைச் செயலா் புவனேஸ்வரி பெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளா் காா்த்திக் உள்ளிட்ட 33 பெண்கள் உள்பட 127 போ் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். அவா்களை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா், மாலையில் அவா்களை விடுவித்தனா்.

 கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

 கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.