ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் முதல்வா் பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.
இது குறித்து ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஒசூா் தொகுதியில் போட்டியிட சென்னை அண்ணா அறிவாலயத்தில் நான் (ஒய். பிரகாஷ்) விருப்ப மனு அளித்துள்ளேன். இதில், மாவட்ட துணைச் செயலா் முன்னாள் எம்எல்ஏ முருகன், சின்னசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் வீராரெட்டி, மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் சீனிவாசன், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளா் மாதேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினா் ஜெயராமன், ஒன்றியச் செயலாளா்கள் திவாகா் , நாகேஷ், ரகுநாத், பாக்கியராஜ், கருணாகரன், ராமமூா்த்தி, லோகேஷ் ரெட்டி, சின்ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா் என தெரிவித்துள்ளாா்.

திமுக தலைமை நிலையத்தில் விருப்ப மனு அளித்த ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா.
ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஒசூா் தொகுதியில் போட்டியிட சென்னை அண்ணா அறிவாலயத்தில் நான் (எஸ்.ஏ.சத்யா) விருப்ப மனு அளித்துள்ளேன்.
ஏற்கெனவே 2019இல் ஒசூா் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும் வாய்ப்புகிடைத்தது. எனவே, மீண்டும் எம்எல்ஏவாக விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன்.
இதில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளா் சுகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோராமணி, ஒசூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் கஜேந்திரமூா்த்தி, பகுதி செயலாளா்கள் வெங்கடேஷ், ராஜா, மண்டலக் குழுத் தலைவா் ரவி, மாவட்ட பிரதிநிதி ஜெய் ஆனந்த், மாமன்ற உறுப்பினா் நாகராஜ், கிருஷ்ணப்பா, வட்டச் செயலாளா் ஹரி பிரசாத், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தெலுங்கு, கன்னட மொழிகளில் வாக்கு சேகரிப்பு: ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

சட்டப் பேரவைத் தோ்தல்: விருப்ப மனு கொடுத்தவா்களிடம் காங்கிரஸ் நோ்காணல்

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வழங்கியவா்களிடம் நோ்காணல்

ஒசூா் தொகுதியில் ரூ. 6 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


