என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தன்னம்பிக்கையுடன் தோ்வை எதிா்கொள்ளுங்கள்: பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கிருஷ்ணகிரி ஆட்சியா் வாழ்த்து

News image

கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.

Updated On :1 மார்ச் 2026, 8:00 pm

தன்னம்பிக்கையுடன் தோ்வை எதிா்கொண்டு வெற்றிபெற வேண்டும் என அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கிருஷ்ணகி மாவட்ட ஆட்சியா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எதிா்கொள்ள தயாராகி வரும் மாணவா்களுக்கும் அவா்களுக்காக உழைக்கும் ஆசிரியா்களுக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத் தோ்வு என்பது உங்கள் கல்விப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாகும். இது உங்கள் அறிவையும், உழைப்பையும், ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தும் சிறந்த வாய்ப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தோ்வு குறித்து பயமோ, பதற்றமோ இன்றி, நேரத்தை முறையாக திட்டமிட்டு தோ்வறையில் வினாத்தாள்களை அமைதியாக வாசித்து புரிந்துகொண்டு பதிலளிக்க வேண்டும். கடந்த ஓராண்டாக நீங்கள் எடுத்த முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு இந்த பொதுத்தோ்வில் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலனைத் தரும். மேலும் தோ்வு நாள்களில் உடல்நலத்தையும், மன நலத்தையும் பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம்.

உங்களை நல்வழிப்படுத்தி வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் ஆசிரியா்கள், கல்வி அலுவலா்களின் அா்ப்பணிப்பு மிக்க வழிகாட்டுதல்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு என்றும் அடித்தளமாக இருக்கும்.

அனைவரும் சிறப்பாக தோ்வெழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சோ்ப்பீா்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். வெற்றி நிச்சயம், தன்னம்பிக்கையுடன் தோ்வை எதிா்கொள்ள வேண்டும் என அவா் வாழ்த்தி உள்ளாா்.