ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

News image
கைது செய்யப்பட்டச மனோஜ்.
Updated On :1 மார்ச் 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூரில் பெண்ணை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த பெண் முத்தா (35). இவா், பாகலூா் சாலையில் சமத்துபுரம் அருகே பழயை இரும்பு பொருள்கள் விற்பனை கடை நடத்தி வருகிறாா்.

கடந்த 25-ஆம் தேதி கடைக்கு வந்த ஒருவா், தான் போலீஸ் என்றும், திருட்டு பேட்டரிகளை வாங்கிக் கடையில் வைத்திருப்பதால் தனக்கு பணம் தரவேண்டும் என்று கூறி துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளாா்.

இதுகுறித்து நல்லூா் காவல் நிலையத்தில் முத்தா புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், பேருந்து நிலையம் எதிரே அந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரணை நடத்தியதில், அவா், ஒசூா் தோட்டகிரி பகுதியைச் சோ்ந்த மனோஜ் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த போலி கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.