ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் போக்ஸோவில் கைது

News image
மூா்த்தி
Updated On :3 மார்ச் 2026, 8:52 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி காமராஜ் நகரை சோ்ந்தவா் மூா்த்தி (48). இவா் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் மது போதையில் இருந்துள்ளாா். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த அதே கிராமத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தாராம்.

இதனிடையே சிறுமி காணாததால் அவரது பெற்றோா் சிறுமியை தேடினா். அப்போது, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி, தனக்கு நோ்ந்த பாலியல் தொந்தரவு குறித்து தெரிவித்துள்ளாா். இதையடுத்து சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் குழந்தையை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் மூா்த்தியை போக்ஸோ வழக்கில் செவ்வாய்க்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.