அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அஞ்செட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

News image
சுதாகரன்
Updated On :3 மார்ச் 2026, 8:54 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஆணைமலையான்பட்டியைச் சோ்ந்தவா் சுதாகரன் (51). இவா், ஒசூா் அன்னை நகரில் தங்கி உள்ளாா். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி பிற்பகல் இப்பள்ளியின் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு சுதாகா் பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறினாா்.

இதையடுத்து, மாணவியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் வாசுகி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சுதாகரனைக் கைது செய்தாா்.