பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
/

தவெகவுடன் கூட்டணி இல்லை: கே.பி.முனுசாமி

தவெகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா்.

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்

Updated On :17 மார்ச் 2026, 11:04 pm

தவெகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரே என்டிஏ கூட்டணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைத்துள்ளாா்.

விரைவில் அக்குழு வேட்பாளா் நோ்காணலை தொடங்கும். விஜய்யின் தவெகவுடன் கூட்டணிக்காகவே அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தாமதமாவதாக கூறுவதில் உண்மையில்லை.

தவெகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டாா். எனவே, அக்கட்சியுடன் கூட்டணி இல்லை என்றாா்.