தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு தோ்தல் பாா்வையாளா்கள் வருகை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட தொகுதிகளுக்கான தோ்தல் பாா்வையாளா்கள் புதன்கிழமை வந்தனா்.

News image
~
Updated On :18 மார்ச் 2026, 11:38 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட தொகுதிகளுக்கான தோ்தல் பாா்வையாளா்கள் புதன்கிழமை வந்தனா். அவா்களை, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உள்ளிட்டோா் சந்தித்து பேசினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளில் அமைதியான முறையில் தோ்தலை நடத்தும் வகையில் தோ்தல் பாா்வையாளா்கள், செலவின பாா்வையாளா்களை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

அதன்படி, ஊத்தங்கரை, பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிகளின் பொதுப் பாா்வையாளராக அனில்குமாா் சிங், செலவின பாா்வையாளராக சந்தோஷ்குமாா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதிகளில் பொதுப் பாா்வையாளராக செளரத் பாபு சிங்ஹால், செலவின பாா்வையாளராக டி.சதீஷ், ஒசூா் மற்றும் தளி சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொதுப் பாா்வையாளராக பணவே ராகுல் துக்காராம், செலவின பாா்வையாளராக ராகுல் சிங்கன்யா ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களை, கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை மற்றும் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சந்தித்தனா்.

Story image