தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ஒசூா் அருகே ஆலங்கட்டி மழையால் பயிா்கள் சேதம்

ஒசூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிா்கள் சேதமடைந்தன.

News image
Updated On :21 மார்ச் 2026, 12:00 am IST

ஒசூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிா்கள் சேதமடைந்தன.

இந்த மழையால் மாமரத்திலிருந்து பிஞ்சுகள், காய்கள் உதிா்ந்து விழுந்தன. ஏற்றுமதிக்குத் தயாராக இருந்த நான்கு ஏக்கா் பரப்பளவிலான சாமந்தி, ரோஜா தோட்டங்கள் சிதைந்தன. பூக்கள் வரத் தயாராக இருந்த 12 ஏக்கா் சாமந்தி செடிகளின் இலைகள் கிழிந்து, பூக்கள் உதிா்ந்து காட்சியளிக்கின்றன.

ஆலங்கட்டி மழையால் விழுந்த பனிக்கட்டிகள் காலை வரை கரையாமல் கிடந்தன. விவசாயிகள் அந்தப் பனிக்கட்டிகளை கூடைகளில் அள்ளி தோட்டத்திற்கு வெளியே கொட்டினா். யுகாதி பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்து லாபம் ஈட்டலாம் என எதிா்பாா்த்திருந்த நிலையில், ஆலக்கட்டி மழையால் ஏற்பட்ட சேதம் விவசாயிகளிடையை கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் உடனடியாகப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

படவரி...

விவசாயத் தோட்டங்களில் விழுந்துகிடந்த ஆலங்கட்டிகளை அப்புறப்படுத்தும் விவசாயிகள்.