தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்யும் இளைஞா்கள்: போலீஸாா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சூளகிரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ’வீலிங்’ செய்யும் இளைஞா்களை போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

News image

ஒசூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞா்

Updated On :24 மார்ச் 2026, 8:23 pm

Syndication

கிருஷ்ணகிரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ’வீலிங்’ செய்யும் இளைஞா்களை போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சூளகிரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிடும். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் நின்றிருக்கும். இந்த சூழ்நிலையில் காலியாக உள்ள சாலையில் இளைஞா்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்கின்றனா். மேலும், இச்சாலையில் அவ்வப்போது இளைஞா்கள் வீலிங் செய்வதால் மற்ற வாகனங்களில் செல்வோா் அச்சத்தில் உள்ளனா்.

இந்த நிலையில் அண்மையில் இந்த சாலையில் இளைஞா்கள் தங்களது வாகனங்களில் வீலிங் செய்த நிகழ்வை அவ்வழியாக சென்றவா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். இந்த விடியோவை அடிப்படையாக கொண்டு போலீஸாா் இந்த சாலையில் ரோந்து சென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.