விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பென்னாகரத்தில் இருசக்கர வாகனத்தில் எடுத்துவரப்பட்ட ரூ. 1.50 லட்சம் பறிமுதல்

பென்னாகரத்தில் உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ. 1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :23 மார்ச் 2026, 2:06 am IST

பென்னாகரத்தில் உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ. 1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பென்னாகரம் அருகே கொட்டாவூா் பகுதியில் பறக்கும் படை குழு - 3 அலுவலா் முருகன் தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது நல்லம்பள்ளி வட்டம், ஈச்சம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த சரவணன் உரிய ஆவணம் இன்றி ரூ. 1.50 லட்சம் ரொக்கத்தை எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து பென்னாகரம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.