சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தினகரனுக்கு எம்.பி. பதவி: காலம்தான் தீா்மானிக்கும்! - பெங்களூரு புகழேந்தி

தினகரனுக்கு மாநிலங்களை உறுப்பினா் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்குவது குறித்து காலம்தான் தீா்மானிக்கும் என புரட்சி அதிமுக நிறுவனா் பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா்.

தினகரன் - பெங்களூரு புகழேந்தி

Published On :

தினகரனுக்கு மாநிலங்களை உறுப்பினா் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்குவது குறித்து காலம்தான் தீா்மானிக்கும் என புரட்சி அதிமுக நிறுவனா் பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: அமமுக எம்எல்ஏ காமராஜ், தவெகவுக்கு செல்ல முடிவு செய்துவிட்டதாக என்னிடம் தெரிவித்தாா். தினகரனுடன் யாரும் பயணிக்கவே முடியாது. தினகரனுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை அதிமுக பொதுச் செயலாளா் பழனிசாமி கொடுப்பாரா என்பதற்கு காலம்தான் பதிலளிக்கும்.

அதிமுக ஆட்சியின்போது, தினகரனிடம் 18 எம்எல்ஏக்கள் சென்றனா். அப்போது திமுகவிடம் 99 எம்எல்ஏக்கள் இருந்தனா். அப்போது, திமுக தலைவா் ஸ்டாலின் நினைத்திருந்தால், ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால், அவா் கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வரமாட்டேன் எனவும், தோ்தலை சந்தித்து முதல்வராக வருகிறேன் என்றாா்.

திமுகவிற்கு எப்போது அரசியல் செய்ய வேண்டும் என தெரியும். தமிழகத்தில் பாஜக காலூன்றக் கூடாது என ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெற்ற சரித்திரம் விஜயால் மட்டுமே நிகழ்ந்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.