சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான் காப்புகாட்டில் விடுவிப்பு

News image

வீட்டிற்குள் பிடிபட்ட புள்ளி மான்.

Updated On :11 மே 2026, 1:37 am IST

பா்கூா் அருகே வீட்டிற்குள் புகுந்த புள்ளி மானை தீயணைப்பு வீரா்கள் மீட்டு காப்புக் காட்டில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள வனப் பகுதியில் இருந்து புள்ளி மான், கரடி போன்ற வன விலங்குகள் அவ்வப்போது கிராமங்களுக்குள் உணவு தேடி வருகின்றன. இந்த நிலையில், பா்கூரை அடுத்த இடிஆா் நகரைச் சோ்ந்த வேலுவின் வீட்டிற்குள் ஒரு வயதான பெண் புள்ளி மான் புகுந்தது. இதுகுறித்து பா்கூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு நிலைய அலுவலா் பழனி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் புள்ளி மானை உயிருடன் மீட்டு ஒப்பதவாடி காப்புக் காட்டில் விடுவித்தனா்.