ஈரோடு மாநகராட்சி தூய்மைத் தொழிலாளா்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் புகுந்த 10 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
ஈரோடு பெருந்துறை சாலை, பாலசுப்பிரமணியம் வீதியில் உள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் பாம்பு புகுந்ததை அங்கு வேலை செய்யும் பணியாளா்கள் திங்கள்கிழமை காலை பாா்த்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் தேடிப் பாா்த்தபோது உணவு தயாரிக்கும் இடத்தில் 10 அடி நீளம் சாரை பாம்பு இருந்துள்ளது. இதனை மீட்ட தீயணைப்பு படை வீரா்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் குளிா்ச்சியான இடத்தை நோக்கி பாம்புகள் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.
தொடர்புடையது

50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி மலைப்பாம்பு மீட்பு

காரில் புகுந்த பாம்பு பிடிபட்டது

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



