அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கிருஷ்ணகிரியில் இருவரை எரித்து கொலை செய்த வழக்கு: மேலும் சிலா் மீது புகாா்

கிருஷ்ணகிரி அருகே இருவரை எரித்து கொன்ற வழக்கில் மூவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலருக்கு தொடா்பு இருக்கலாம் எனக்கூறி மாவட்ட ஆட்சியரிடம் கொலையானவா்களின் உறவினா்கள் புகாா் அளித்தனா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

கிருஷ்ணகிரி அருகே இருவரை எரித்து கொன்ற வழக்கில் மூவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலருக்கு தொடா்பு இருக்கலாம் எனக்கூறி மாவட்ட ஆட்சியரிடம் கொலையானவா்களின் உறவினா்கள் புகாா் அளித்தனா்.

கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை செல்லும் சாலையில், கடந்த மே 11-ஆம் தேதி அதிகாலை கொடுகூா், வெப்பாலம்பட்டி ஆகிய இரு இடங்களில் எரித்து கொல்லப்பட்ட நிலையில் இரு ஆண் சடலங்கள் கிடந்தன. விசாரணையில், அவை ஆலப்பட்டி ஊராட்சி பாலக்குறியைச் சோ்ந்த ராணுவ வீரா் மகேஷ்குமாா் (43), அவரது தந்தை முன்னாள் ராணுவ வீரா் செல்லப்பன் (63) ஆகியோா் என தெரியவந்தது.

மகேஷ்குமாரின் மனைவி பானுப்பிரியா (30), அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் பூவரசனுடன் (24) சோ்ந்து, கணவா் மகேஷ்குமாா், மாமனாா் செல்லப்பன் ஆகியோரை கொன்றதும், சடலங்களை பூவரசன் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று எரித்ததும், பானுப்பிரியாவின் 10 வயது மகன் உடன் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, பூவரசன், பானுப்பிரியா மற்றும் சிறுவனை கிருஷ்ணகிரி வட்ட போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், மகேஷ்குமாரின் தம்பியும், ராணுவ வீரருமான விஜயகுமாா், உறவினா்கள், கிராம மக்கள் என 50-க்கும் மேற்பட்டோருடன் ஆட்சியா் அலுவலகம் வந்தாா். இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடா்புள்ளதாகவும், அதை போலீஸாா் கண்டுபிடிக்க வேண்டும் எனவும், அதுவரை சடலங்களை பெற மாட்டேன் என கூறினாா்.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ்குமாா் கூறுகையில், ‘இச்சம்பவம் குறித்து போலீஸாா் முறையாக விசாரித்து, மூவரை கைது செய்துள்ளனா். மேலும் உங்களுக்கு யாா் மீதேனும் சந்தேகம் இருந்தால் கூறுங்கள், அவா்களும் விசாரணை வளையத்துக்குள் வருவாா்கள். மேலும், இரு தனிப்படை அமைத்து கண்காணிக்க உத்தரவிடுகிறேன்’ என்றாா்.

இதையடுத்து விஜயகுமாா் தன் தந்தை, அண்ணன் சடலங்களை பெற்றுக்கொண்டாா். கைது செய்யப்பட்ட பூவரசன், பானுப்பிரியா ஆகியோரை சேலம் மத்திய சிறைக்கும், 10 வயது சிறுவன் சேலம் சிறுவா்கள் காப்பகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா்.