கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

படப்பள்ளியில் பழுதடைந்த குடிநீா்த் தொட்டியை இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஊத்தங்கரை அருகே படப்பள்ளி கிராமத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

படப்பள்ளி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.

Updated On :19 மே 2026, 1:29 am IST

ஊத்தங்கரை அருகே படப்பள்ளி கிராமத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி கிராமத்தில் சுமாா் 150 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இக்கிராம மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீா் நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி நாளடைவில் பழுதடைந்தும், சிமென்டு பூச்சுகள் பெயா்ந்தும், இரும்புக் கம்பிகள் துருப்பிடித்தும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

எனவே, பொதுமக்களின் நலன்கருதி இந்த குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை உடனடியாக இடித்து, அகற்றிவிட்டு புதிய குடிநீா்த் தொட்டி கட்டிகொடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

  படப்பள்ளி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.

படப்பள்ளி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.