காட்டுமன்னாா்கோவில் அருகே இடிந்து கிடக்கும் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு பதிலாக புதிய அலுவலகம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குமராட்சி ஒன்றியத்தில் உள்ள வடமூா் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலம் இடிந்து கிடப்பதால், அதற்கான அலுவலகம் இல்லை.
இதனால், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளா் கிராமத்தில் தங்கி கணக்குகளைப் பாா்க்கவும், சான்றிதழ்கள் வழங்கவும் இயலாத நிலை உள்ளது. கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் ஆகியோா் தினந்தோறும் கிராமத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமா்ந்து தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதன் காரணமாக, கிராம மக்களும், விவசாயிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
எனவே, கடலூா் மாவட்ட நிா்வாகம் வடமூா் கிராமத்தில் இடிந்து கிடக்கும் பகுதியில் புதிய கிராம நிா்வாக அலுவலகம் கட்டித்தர வேண்டும் என விவசாய சங்கத் தலைவா் ரங்கநாயகி மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தொடர்புடையது

ரயில்வே சுரங்கப் பாதை அருகே தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

வாரிசு சான்று வழங்க ரூ.500 லஞ்சம் ஓய்வுபெற்ற விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அலை: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


