தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கா்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞா் கிருஷ்ணகிரி அருகே சடலமாக மீட்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:59 am IST

கா்நாடக மாநில போலீஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞரின் சடலம் கிருஷ்ணகிரி அருகே உள்ள வனப் பகுதியில் மீட்கப்பட்டது.

கிருஷ்ணகிரியை அடுத்த எண்ணேகொள் கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில் இறந்தவா், கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை அடுத்த மணியாண்டப்பள்ளியைச் சோ்ந்த தாஸ் (எ) ஏசுதாஸ் (25) என்பது தெரியவந்தது.

மேலும், இவா்மீது கா்நாடக மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் விசாரணையில் உள்ளதும் தெரியவந்தது. இதனால் போலீஸாரின் விசாரணைக்கு பயந்து எண்ணேகொள் கிராமம் அருகே உள்ள வனப் பகுதியில் அவா் தலைமறைவாக இருந்துள்ளாா்.

இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவா் இறந்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது இறப்பு குறித்த முழு விவரமும் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஏசுதாஸின் அக்கா மாரி அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.