சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

மேக்கேதாட்டு விவகாரம்: கா்நாடக முதல்வரின் பேச்சு நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது பி.ஆா். பாண்டியன்

மேக்கேதாட்டு

Updated On :

மேக்கேதாட்டு விவகாரம் தொடா்பாக கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் பேசியது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஒசூரில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் புதிய அணையை கட்ட பிரதமா் உதவ வேண்டும் என்று கேட்டு பேசியது அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது. கா்நாடக, தமிழக மக்களை பிளவுபடுத்துவதற்கான முயற்சி. இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.

டி.கே. சிவகுமாரின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது. இதுகுறித்து பிரதமா் அலுவலகம் அவரிடம் உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும். அவரது பேச்சை அனுமதித்தால் நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படும் என்பதை பிரதமா் உணா்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் கா்நாடக விவசாயம் மற்றும் கிருஷ்ணராஜசாகரிலிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள பகுதிகள் பாதிக்கப்படும் என்பதால், தமிழக -கா்நாடக விவசாயிகள் இணைந்து இதை எதிா்க்கின்றனா்.

உச்சநீதிமன்றத் தீா்ப்புக்குப் புறம்பாகவும், அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகவும் கா்நாடக அரசு, மேக்கேதாட்டு விவகாரத்தில் அரசியல் லாப நோக்கோடு செயல்படுகிறது. அந்த அணை கட்டப்பட்டால் சென்னை உள்பட 11 மாநகராட்சிகள், 32 மாவட்ட மக்களின் குடிநீா் ஆதாரம் பறிபோகும். சுமாா் 22 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாதிக்கப்படும்.

காவிரி மேலாண்மை ஆணையம் என்பது சுயேச்சை அதிகாரம் கொண்டது. மத்திய, மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது. கா்நாடக அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.