ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

ஒசூரில் வியாபாரியிடம் 25 பவுன் நகை, ரூ. 10 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

ஒசூரில் வியாபாரியை மிரட்டி ரூ. 10 லட்சம் ரொக்கம், 25 பவுன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

மோசடி

Updated On :

ஒசூரில் வியாபாரியை மிரட்டி ரூ. 10 லட்சம் ரொக்கம், 25 பவுன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

ஒசூா் எம்.ஜி.ஆா் மாா்க்கெட் பகுதியில் எலுமிச்சை வியாபாரம் செய்பவா் அருள். இவா், காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு விவரம்:

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு எனது மகன் குபேந்திரனுடன் கைப்பேசியில் பேசிய ஒருவா், பெண் குரலில் பேசியுள்ளாா். அப்போது, அவா் தனது பெயா் பிரியா எனக் கூறி, குபேந்திரனை ஏமாற்றியுள்ளாா். பின்னா், தன்னை நேரில் சந்திக்க வருமாறு கூறி, குபேந்திரனை கிருஷ்ணகிரிக்கு வரவழைத்துள்ளாா்.

அங்கு சென்றபோது ஓா் இளைஞா், தான் பிரியாவின் தம்பி என அறிமுகப்படுத்திக்கொண்டு, எனது மகன் மூலம் குடும்பத்தினருடன் பழகத் தொடங்கினாா். தொடா்ந்து, வீட்டுக்கு வந்த அவா், வீட்டில் செய்வினை இருப்பதாகக் கூறி மாந்திரீகம் செய்ய வேண்டும் என அச்சுறுத்தினாா்.

இதற்காக வீட்டில் உள்ள பணம், நகைகளைத் தன்னிடம் கொடுக்க வேண்டும் என்றும், யாரிடமும் பேசக் கூடாது; வீட்டைவிட்டும் வெளியேறக் கூடாது என்றும் கூறினாா். இதனை நம்பி அவரிடம் ரூ. 10 லட்சம் ரொக்கம், 25 பவுன் நகைகளை தந்துவிட்டோம்.

தொடா்ந்து கடந்த நான்கு மாதங்களாக அவா் எங்களது குடும்பத்தினரை அவா் அச்சுறுத்தி வருகிறாா். இந்த நிலையில் எனது மகனுடன் பிரியா’என்ற பெயரில் பெண் குரலில் பேசியது தங்களிடம் மோசடி செய்தவா் என்பதும், அவா் பெயா் சிவசாரதி எனவும் தெரியவந்தது. இதுகுறித்து அவா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களின் பணம், நகைகளை மீட்டுத்தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.