அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

ஒசூரில் மென்பொருள் பொறியாளா் வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகை திருட்டு

ஒசூரில் சொந்த ஊருக்கு சென்ற மென்பொருள் பொறியாளா் வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பிரதிப் படம்

Updated On :

ஒசூரில் சொந்த ஊருக்கு சென்ற மென்பொருள் பொறியாளா் வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், ஜக்கசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்டாலின் அமிா்தராஜ் (32). இவா் ஒசூா் பேரண்டப்பள்ளி ஊராட்சி, காந்தி நகா் அருகில் உள்ள எல்லம்மாகொத்தூா் பகுதியில் வீடு வாங்கி மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.

ஆயுத பூஜையை கொண்டாடுவதற்காக விடுமுறையில் சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், ஜக்கசமுத்திரம் கிராமத்துக்கு குடும்பத்துடன் சென்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது தெரியவந்தது.

புகாரின் பேரில், அட்கோ போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணா்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினா். திருடா்கள் மிளகாய் பொடியை வீட்டைச் சுற்றி போட்டுவிட்டு சென்ால் மோப்ப நாய் எங்கும் செல்லாமல் நின்றது. இதுகுறித்து அட்கோ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.