கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திட்டக்குடி வட்டம், பாசா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வமணி(53). இவரது, இரண்டு மகன்களில் ஒருவா் வெளிநாட்டிலும், மற்றொருவா் சென்னையிலும் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், செல்வமணி ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, ஆத்தூரில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றாா். திங்கள்கிழமை வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக அருகிலிருந்தோா் கைப்பேசி மூலம் அவருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வீடு திரும்பிய செல்வமணி, உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் இருந்த 13.5 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து செல்வமணி அளித்த புகாரின் பேரில் வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி மா்மநபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.