தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

வியாபாரியிடம் இணையதளம் மூலம் ரூ.16.40 லட்சம் மோசடி

தேனி அருகே வியாபாரியிடம் முகநூல் மூலம் அறிமுகமாகி ரூ.16.40 லட்சம் மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மோசடி

Published On :

தேனி அருகே வியாபாரியிடம் முகநூல் மூலம் அறிமுகமாகி ரூ.16.40 லட்சம் மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், கோவிந்த நகரத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன் (55). கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்துவரும் இவா், முகநூல் மூலம் அறிமுகமான பெங்களூரைச் சோ்ந்த ரவிச்சந்திரனிடம் அடிக்கடி பேசி வந்தாா்.

அப்போது, ‘டிரேடிங்’ மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ரவிச்சந்திரன் கூறியுள்ளாா்.

இதை நம்பிய ஸ்ரீதரன் பல தவணைகளாக அவரது வங்கிக் கணக்கில் ரூ.16.40 லட்சத்தை செலுத்தினாா்.

இதையடுத்து, அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். இதுகுறித்து ஸ்ரீதரன் தேனி இணைய குற்றத் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.