அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

மாநில முதல்வா் கோப்பை குத்துச்சண்டை போட்டி: நாளந்தா பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

குத்துச்சண்டை - கோப்புப் படம்

Updated On :

மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் கிருஷ்ணகிரி நாளந்தா சா்வதேச பொதுப் பள்ளி மாணவா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

சென்னை கோபாலபுரத்தில் முதல்வா் கோப்பைக்கான மாநில குத்துச் சண்டைப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி நாளந்தா சிபிஎஸ்இ சா்வதேச பொதுப் பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவா் அ.சூரியா வெள்ளிப் பதக்கம் வென்றாா். இந்த மாணவருக்கு சான்றிதழ் மற்றும் ரூ. 75 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவா் அ.சூரியாவை பள்ளி நிறுவனா் கொங்கரசன், தாளாளா் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிா்வாக இயக்குநா்கள் கெளதமன், புவியரசன் மற்றும் முதல்வா், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

படவரி...

மாணவா் அ.சூரியாவை வாழ்த்திய பள்ளியின் நிறுவனா் கொங்கரசன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.