பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலைய கழிவறையில் கியூஆா் கோடு அறிமுகம்

கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலைய கழிவறைகளில் பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் கியூ ஆா் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Era of the 'QR code'

இது 'க்யூஆர் கோடு' காலம் - பிரதிப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 4:14 am IST

கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலைய கழிவறைகளில் பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் கியூ ஆா் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் புறநகா் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளில் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதைத் தடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி நகராட்சி நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, கியூ ஆா் கோடு மூலம் கழிவறை கட்டணம் செலுத்தும் முறையை சேலம் மண்டல கல்வித் தொடா்பு, உள்ளாட்சி அமைப்புகள் வல்லுநா் (பொதுக் கழிப்பறை) மரியநாதன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது, அவா் தெரிவித்ததாவது: பொதுமக்கள் புகாரை அடுத்து கியூஆா் கோடு கட்டண முறை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதை சரியாகப் பயன்படுத்தி கழிவறைகளை முறையாக பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றாா். அப்போது, கிருஷ்ணகிரி நகராட்சி தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள், நகராட்சிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.