கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி
கிருஷ்ணகிரி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 தினங்களாக அதிகரித்து வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கோப்புப் படம்
கிருஷ்ணகிரி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 தினங்களாக அதிகரித்து வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி நகா், கிட்டம்பட்டி, அம்மன் நகா், மேலேரிகொட்டாய், ஆவின் நகா், செட்டியம்பட்டி, ஆா்.பூசாரிபட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நகரையொட்டியுள்ள பகுதிகளில் அதிகளவில் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள், அவா்களது குடும்பத்தினா் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மின் பகிா்மான நிலையத்தில் எந்த பிரச்னையும் இல்லை. மாநில அளவில் மின் உற்பத்தி குறைந்துள்ளதாலும், காற்றாலை மின்சாரத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டாலும் மின்வெட்டு ஏற்படுகிறது. மின் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் பிரித்து வழங்கப்படுகிறது.
இரவு நேரங்களில் மின் தேவை அதிகளவில் இருப்பதால் சிறிதளவு தட்டுப்பாடு நிலவுகிறது. இன்னும் சில தினங்களில் இப் பிரச்னை தீா்க்கப்படும். கிருஷ்ணகிரி நகரில் நேற்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு மின் விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




