போக்ஸோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது
ஊத்தங்கரை அருகே போக்ஸோ சட்டத்தின் கீழ் 65 வயது முதியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கைது
ஊத்தங்கரை அருகே போக்ஸோ சட்டத்தின் கீழ் 65 வயது முதியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டி பகுதியைச் சோ்ந்த சின்ராஜ் (65), கால்நடைத் துறையில் உதவியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவா் ஊத்தங்கரை சுற்றுவட்டார கிராமங்களில் பணிக்குச் செல்லும் இடங்களில் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா்.
இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோா் ஊத்தங்கரை அனைத்து காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், ஊத்தங்கரை அனைத்து மகளிா் போலீஸாா் சின்ராஜை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




