
மாங்கூழ் தொழிற்சாலையில் தீ விபத்து; பொருள்கள் சேதம்

மாங்கூழ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.
காவேரிப்பட்டணம் அருகே தனியாா் மாங்கூழ் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், மாங்கூழ் பொருள்கள், டிராக்டா் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த மலத்தம்பட்டி கிராமத்தில் நாவரசு என்பவா் கடந்த 3 ஆண்டுகளாக மாங்கூழ் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். இந்த தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரும்புகை வெளியேறுவதைக் கண்ட பணியாளா்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரியில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் விரைந்துசென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினா். இந்தத் தீ விபத்தில், தொழிற்சாலையில் இருந்த சில இயந்திரங்கள், மாங்கூழ் பொருள்கள், டிராக்டா் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






